Tuesday, December 16, 2014

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஈபிடிபி மற்றும் புலிகூட்டமைப்பு (ததேகூ) குழுக்களுக்கு இடையில் மோதல்!

Tuesday, December 16, 2014
இலங்கை::
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஈபிடிபி மற்றும் ததேகூ குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்ற போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் புலிக்களுக்கு ஆதரவான வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் ஆகியோர்  காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை போத்தலால் எறிந்து காயப்படுத்தினார்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியது. இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு குழப்பம் ஏற்பட்டது.
இதன்போது புலிக்களுக்கு ஆதரவான அமைச்சர் ஐங்கரநேசன் மீது  ஒருவர் தண்ணீர்ப் போத்தலால் எறிந்து தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதலில் அவர் காயமடைந்தார்.வட மாகாண சபை மீது குற்றஞ்சாட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன்போது புலிக்களுக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சபையில் வாக்குவாதம் எழுந்து அது தண்ணீர்ப் போத்தல்களால் தாக்கும் அளவுக்கு வலுப்பெற்றது. இந்த சமயம் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த பொலிஸார் சபையை விட்டு வெளியேறினர். இதன் போது புலிக்களுக்கு ஆதரவான விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது இரண்டு தண்ணீர்ப் போத்தல்கள் வீசப்பட்டன. இதனால் அவர் காயமடைந்தார். இதனையடுத்து புலிகூட்டமைப்புப் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
 
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ராஜ்குமார் பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிறிரங்கேஸ்வரன் வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அரிகரன் கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த ரட்னகுமார் ஆகியோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழப்பம் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment