Tuesday, December 16, 2014
புதுடெல்லி::இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ் அரிஹன்ட், விசாகப்பட்டினத்தில் நேற்று சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட் டது. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் சக்ரா என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே உள்ளது. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
இந்நிலையில் கடற்படைக்கு தேவையான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐ.என்.எஸ் அரிஹன்ட் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்டது. 6 ஆயிரம் டன் எடையுள்ள இந்த கப்பலில் 83 மெகாவாட் திறனுள்ள அணுஉலை உள்ளது. இந்த கப்பலில் இருந்து 3,500 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய கே-4 ரக ஏவுகணைகள் மற்றும் 700 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிஓ 5 ரக ஏவுகணைகளையும் ஏவ முடியும்.
அதை கடலில் செலுத்தும் சோதனை நேற்று தொடங்கியது. நீர்மூழ்கி கப்பலை கடலுக்கு அடியில் செலுத்துல், ஆயுதங்கள் பரிசோதித்தல் உட்பட கப்பலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த கடல்சோதனையில் பரிசோதிக்கப்படவுள்ளன. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இன்னும் 2 ஆண்டில் இந்த கப்பல், கடற்படையில் சேர்க்கப்படும். ஐ.என்.எஸ் அரிஹந்த போருக்கு தயார் என அறிவிக்கப்பட்டு விட்டால், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திறன்படைத்த 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெயர் கிடைக்கும்.

No comments:
Post a Comment