Pages

Monday, December 15, 2014

ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தார்!

Monday, December 15, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று இணைந்து கொண்டுள்ளார்.

அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவதாக கூறி வரும் நிலையில், அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியில் இணைந்துள்ளார்.
 

No comments:

Post a Comment