Monday, December 15, 2014
இலங்கை::புலிகளும் ஜே.வி.பி கட்சியுமே இலங்கையின் பல்கலைக்கழகங்களை நாசமாக்கியதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::புலிகளும் ஜே.வி.பி கட்சியுமே இலங்கையின் பல்கலைக்கழகங்களை நாசமாக்கியதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1980ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் இந்த நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வேந்தர்கள், துணைவேந்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், செனட்டர்கள் உள்ளிட்டவர்கள் பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெற்கில் ஜே.வி.பியும், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் முனைப்புக்கள் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் இரண்டு துணை வேந்தர்களை புலிகளும், ஜே.வி.பியினரும் படுகொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சுமார் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்தததுடன், ஜே.வி.பி. சுமார் 400 பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியைப பொறுப்பேற்றுக் கொள்ளும் வரையில் பல்கலைக்கழக முறைமையில் பாரிய பின்னடைவு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டில் 9000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்டதாகவும் 2014ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25000 மாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், 2020ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment