Pages

Tuesday, December 16, 2014

கிராண்பாஸில் ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பு: ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு !

Tuesday, December 16, 2014
இலங்கை::
இன்று கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிராண்ட்பாஸ் பலா மரச் சந்தியில் மக்களை சந்தித்தார்.
மிக உற்சாகமாக ஜனாதிபதியை வரவேற்ற சிங்கள-  முஸ்லிம்- தமிழ் மக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
 
அதனைத் தொடர்ந்து கொட்டிகாவத்த பிரதேசத்தில் நடைபெற்ற 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.  
 
ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு !              
 
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பாணந்துறை பிரதேசசபை உறுப்பினரான ஷாந்த பண்டார மற்றும் பேருவல பிரதேசசபை உறுப்பினரான யு.என். சுமித் நிஷாந்த ஆகியோர் நேற்று (15) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை பாணந்துறை மகாஜன விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மேடைக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் 2015இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் இணைந்துகொண்டனர்.
 
Kosgas-2
Kosgas-3
Kosgas-4
Kosgas-5
Kosgas-6
Kosgas-7

No comments:

Post a Comment