Friday, December 19, 2014

ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

 Friday, December 19, 2014      
புதுடெல்லி::ஒபாமா வருகையையொட்டி டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். இதையொட்டி தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்களும், இந்திய உளவு அமைப்புகளும் மத்திய அரசை உஷார்படுத்தியுள்ளனர்.

டெல்லியில் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் நகரங்களிலும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில்
 
காஷ்மீரில் இந்திய எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல், சிட்னியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பெஷாவரிலும் பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதால் ஒபாமா வருகையையொட்டி டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களில் தீவிரவாத தாக்குதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடவும், போலீசார் முழு உஷார் நிலையில் இருக்கவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment