Wednesday, December 24, 2014
புதுடெல்லி::இரு மாநிலத் தேர்தல் முடிவுகள், கட்சித் தொண்டர்களின் அயராத, தன்னலமல்லாத உழைப்புக்கு கிடைத்தப் பலன்கள் என்று தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இரு மாநிலத்திலும் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியானது, கட்சித் தொண்டர்களின் அயராத, தன்னலமல்லாத உழைப்புக்கு கிடைத்தப் பலனாகும். அவர்களை பாராட்டுகிறேன். காஷ்மீரில் மிக அதிக அளவில் மக்கள் வாக்களித்ததே மிகப் பெரிய வெற்றியாகும். இது ஜனநாயகத்தின் மீதான காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்பை விளக்குகிறது. அவர்களுக்கு எனது அடிமனதில் இருந்து நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலையான, ஸ்திரமான அரசு அமைய வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலத்தின் உண்மையான ஆதாரங்களை, வலிமையை ஏற்படுத்த இது உதவும். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது ட்விட்டர் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment