Tuesday, December 16, 2014

மட்டு-மாவட்டத்தில்-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள்!

Tuesday, December 16, 2014
இலங்கை::
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முன்னணியின் பங்காளி கட்சிகளால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இதற்கமைய இம் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் ஜனாதிபதியின் தேர்தல் முகவர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள்,கட்சி அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற விஷேட கலந்துரையாடல்  ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு –திருமலை வீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முகவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும்,மட்டக்களப்பு தொகுதியின் தேர்தல் முகவராக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும்,கல்குடா தொகுதியின் தேர்தல் முகவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலியும்,பட்டிருப்பு தொகுதியின் தேர்தல முகவராக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment