Thursday, December 11, 2014
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி பாலம் விமான நிலையத்தில் தனிவிமானம் மூலம் வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த புதின், தனது பயணம், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
புதினின் இந்திய வருகை, இருநாட்டு நல்லுறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரஷ்யாவுடனான நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, புதினுடனான சந்திப்பு இருக்கும் என்றும் மோடி கூறியிருக்கிறார். அணுசக்தி, ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் ராணுவ வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களுக்கு சந்திப்பின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
அதிபர் புதின் 5 முறை இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், இந்தியா வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பாக கடந்த ஜூலை மாதம் பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இருவரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment