Pages

Tuesday, December 16, 2014

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது புலிகூட்டமைப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான கட்சியின் உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வை!

Tuesday, December 16, 2014
இலங்கை::
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது புலிகூட்டமைப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான கட்சியின் உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கூட்டமைப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டார்.
 
இதனிடையே இச்சம்பவத்தின் போது காயமடைந்த மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நலம் விசாரித்துக் கொண்டார்.
 
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment