Wednesday, December 17, 2014
இலங்கை::வெளிநாடுகளில் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குச் சொந்தமான பாராளுமன்றம் ஒன்றை அமைத்திருப்பதாகவும் இலங்கையின் நலன்களுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதுடன் புலிகளின் கட்டமைப்பால் நாடு இப்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் எச்சரித்திருக்கிறார்.

பாணந்துறையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வெளிநாடுகளில் இயங்கும் இந்தக் குழுக்கள் தொடர்பாகவும் இலங்கைக்குள் இருந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் தொடர்பாகவும் நாடு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் புலிகள் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை மக்களும் அரசாங்கமும் தொடர்ந்து போராட வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி 8 தேர்தலில் வெற்றிலைக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வெற்றியை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
என்னோடு நாட்டு மக்கள் இருக்கும் வரை என்னை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள ஹேக்கிற்கு கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சிலாபத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; வெளிநாடுகளில் தற்போது செயற்படும் புலி பிரிவினைவாதிகள் வேறான பாராளுமன்றங்களையும் அமைச்சர்களையும் உருவாக்கிக் கொண்டு எம்மைத் தோற்கடிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். அதற்கான கொள்கைகளைத் தயாரிப்பவராக சுமந்திரன் இருக்கின்றார்.

தற்போது நாட்டில் சேறு பூசும் மற்றும் எதனையும் விமர்சிக்கும் அரசியலே காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
இந்நிலையில் மக்கள் வெளிநாடுகள் தொடர்பாக கவனமாக செயற்பட வேண்டும். வெளிநாடுகளில் ஆணைக்குழுக்களை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. என்னை ஹேக்கிற்கு கொண்டு செல்லவுள்ளதாகக் கூறுகின்றனர். நாட்டு மக்கள் என்னுடன் இருக்கும் வரை அவ்வாறு செய்ய முடியாது.
எனது பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்கியதாக என்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஹெலிகொப்டர்களை வாங்கிக் கொடுத்தேன். அது உண்மைதான். ஆனால் அது இப்போதல்ல, அவர்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்த காலத்தில் விளையாட்டு ஹெலிகொப்டர்களை வாங்கிக் கொடுத்தேன்.

உண்மையில் நான் ஒருபோதும் மைத்திரிபாலவை குற்றஞ்சாட்டியதில்லை. ரணிலும், ஜே.வி.பி.யினரும்தான் கடந்த காலங்களில் அவரைக் குற்றஞ்சாட்டியதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment