Pages

Tuesday, December 9, 2014

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து யாழில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்!

Tuesday, December 09, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து நேற்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார்  வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது.
 
இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி சந்தி ,சத்திரச்சந்தி வழியாக சென்று பின்னர் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
 
பின்னர் அவ்விடத்தில் பட்டாசு கொளுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 
அங்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் மீண்டும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.இதுவரை நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து எங்கள் பிரதேசத்தை பின்தங்கி வைத்திருக்கின்றோம்.இனியும் அப்பிழைகளை விடாது அந்த அரியவாய்ப்பை எமது முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.













No comments:

Post a Comment