Tuesday, December 23, 2014
இலங்கை::பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஜேம்ஸ் டோரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை::பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஜேம்ஸ் டோரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஜோன் ரங்கீன் மற்றுமொரு ராஜதந்திர சேவைக்காக இடமாற்றம்பெற்று சென்றுள்ளதை அடுத்தே ஜோம்ஸ் டோரிஸ் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1995 ஆம் ஆண்டு ராஜதந்திர சேவையில் இணைந்துகொண்டுள்ள ஜேம்ஸ், இதற்கு முன்னர் தென்னமெரிக்க நாடான பேருவின் பிரித்தானிய உயர்ஸ்தானிகராக நான்கு வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு ராஜதந்திர சேவையில் இணைந்துகொண்டுள்ள ஜேம்ஸ், இதற்கு முன்னர் தென்னமெரிக்க நாடான பேருவின் பிரித்தானிய உயர்ஸ்தானிகராக நான்கு வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.
அதேவேளை தெற்காசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய விவகாரங்கள் குறித்தும் அனுபவிமிக்க ஜேம்ஸ், ரஷ்யா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கான ராஜதந்திர சேவையிலும் கடமையாற்றியுள்ளார்.

No comments:
Post a Comment