Pages

Thursday, December 25, 2014

சிறிகொத்தா ஆர்ப்பாட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: விமல் வீரவன்ஸ!

Thursday, December 25, 2014
இலங்கை::சிறிகொத்தாவுக்கு முன்னால் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
 
தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சர் விமல் வீரவன்ச அங்கம் வகிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் உள்ளடங்குகிறது.
 
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் வடக்கில் இருந்து படையினரை குறைக்கும் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தியே நேற்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் வெளியில் வந்து தமக்கு பதில் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். இந்த நிலையிலேயே மோதல் உருவாகி பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

No comments:

Post a Comment