Sunday, December 14, 2014
இலங்கை::கட்சித் தாவிய உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை::கட்சித் தாவிய உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் அண்மையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்து கட்சித் தாவியிருந்தனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சித் தாவிய அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுரைகளுக்கு அமைவாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மாகாணசபையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment