Pages

Tuesday, December 16, 2014

தேர்தல் ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலமர்வில் பங்கேற்பு!

Tuesday, December 16, 2014
இலங்கை::
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொலிஸ் உயர்மட்ட  அதிகாரிகளுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றிய  செயலமர்வு பொலநறுவை மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் தவிசாளர். நீதிபதி பிரியந்த ஆர்.பி. பெரேரா அவர்களின் தலைமையில் 15.12.2014 நேற்று  நடைபெற்றது.
 
இந்நிகழ்வின் போது தேர்தல்கள் ஆணையாளர். மஹிந்த தேசப்பிரிய அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதோடு.  ஆணைக்குழுவி;ன் ஆணையாளர்களான கலாநிதி. பிரதீபா மகாநாமஹேவா, ஆணையாளர் திரு.ரி.இ. ஆனந்தராஜா, ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர். சடடத்தரணி. நிமால் புஞ்சிஹேவா, ஆணைக்குழுவின் பணிப்பாளர். பிரசன்னா அரம்பத், ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர். ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வின் போது தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் உரையாற்றியதோடு தேர்தல் பற்றிய பொலிஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment