Sunday, December 14, 2014
இலங்கை::உலக இந்துக்களால் பெரு நம்பிக்கையுடன் போற்றி வணங்கப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி மஹா விஷ்ணு தெய்வத்தைத் தனது அரசியல் தேவை க்காக ஊடகங்களில் தரக்குறைவாகப் பயன்ப டுத்திய பொது வேட்பா ளர் மைத்திரிபால சிறி சேனவின் கருத்து இலங்கை வாழ் இந்துக் களை மனவேதனை அடையச் செய்துள்ளதா கவும்
இதற்குத் தானும் அம்மக்களுடன் இணைந்து பலத்த கண்டனத்தைத் தெரி விப்பதாகவும் இலங்கை இந்து வித்யா குருகுல மத பீடாதிபதி பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் மக்கள் போற்றும் தலைவராக விளங்கும் ஜனாதிபதி சகல மதங்களையும் சரிசமமாக மதிப்பவர். அவர் பெளத்தராக இருந்தாலும் இந்துக் கடவுள் வழிபாட்டிலும் அதீத நம்பிக்கை கொண்டவர். அவர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல தடவைகள் சென்று வழிபட்டடுள்ளார்.இந்தத் தடவை அவர் சென்று வழிபட்டதைக் கிண்டல் செய்யும் வகையில் பொது வேட்பாளர் மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து தமிழ் ஊடகங்களில் முன் பக்கச் செய்தியாக வந்துள்ளமை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இது கடும் கண்டனத்திற்குரியது.
இதனால் இந்துக்கள் அவர் மீது பெரும் வெறுப்புற்றிருக்கின்றனர். இவ்விடயம் மட்டும் இந்திய இந்துக்களுக்குத் தெரிய வந்தால் நிலைமை மோசமாகும் எனவும் பிரம்மஸ்ரீ பாபு சர்மா தெரி வித்துள்ளார்.உண்மையில் திருப்பதி வெங்கடசலாபதி ஸ்ரீ மஹா விஷ்ணு கடவுள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே அருள் பாலித்துள்ளார். இவர் போன்ற கூட இருந்தே குழி பறிப்பவர்களை இனங்காட்டி அவர்களைக் கட்சியிலிருந்தும் வெளியேற்றிவிட்டார். இதனால் ஜனாதிபதிக்கு திருப்பதி மஹா விஷ்ணு தெய்வத்தின் கருணைக் கடாட்சம் மட்டுமல்ல உண்மையான பலனும் முன்னைய காலங்கள் போலவே நிச்சயம் கிடைக்கும் எனவும் பாபு சர்மா ஐயா தெரிவித்தார்.
இந்த ஒரு விடயத்திலிருந்தே பொது வேட்பாளர் மைத்திரிபால குறித்தும் அவர் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அன்பு குறித்தும் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.இத்தகைய ஒருவருடன் இனியும் மனோ கணேசன் போன்றவர்கள் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமா எனவும் பாபு சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.உண்டக வீட்டுக்கு துரோகம் செய்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதிக்குக் காட்டிக் கொடுத்த சக்தி மிக்கக் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி எனவும் பாபு சர்மா குருக்கள் தெரிவித்தார்.
மைத்திரிபால தெரிவிப்பது பொல இறுதியாக வெளியேறிய பிரதியமைச்சர்களான திகாம்பரமும், இராதாகிருஷ்ணனும் அவரைப் போலவே ஜனாதிபதிக்கு முதுகில் குத்த முற்பட்டவர்களே தவிர அவர்களால் எவ்விதமான பலனும் ஜனாதிபதிக்கு இல்லை. இருந்தும் ஜனாதிபதி அவர்களை பிரதியமைச்சர் பதவி கொடுத்து கெளரவப்படுத்தி வைத்திருந்தார்.உண்மையில் அவர்கள் வெளியேறியமை ஒருவகையில் ஜனாதிபதிக்கே நன்மை. மலையகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானே மக்கள் சக்தி பெற்ற உணமையான தலைவராவார் எனவும் பாபு சர்மா தெரிவித்தார். வெளியேறிச் சென்ற இவ்விரு பிரதியமைச்சர்களே மைத் திரிபாலவுக்கு வாக்களிப்பார்களா என் பதே சந்தேகம் எனவும் அவர் தெரி வித்தார்.

No comments:
Post a Comment