Tuesday, December 23, 2014
இலங்கை::வட மாகாணசபை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆற்றல் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை::வட மாகாணசபை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆற்றல் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சுயாதீனமான முறையில் வட மாகாணசபை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆற்றல் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய்க்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வட பகுதி மக்கள் ஆதரவினை தெரிவிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment