Thursday, December 18, 2014
இலங்கை:: வீரகேசரி, உதயன் பத்திரிகைகளில் ஜாதிக்க ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்த கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் அப்பத்திரிகைகளைக் சுட்டிக் காட்டி அதன் மொழிபெயர்ப்புடன் ஊடகவியலாளர்களுக்கும் வாசித்துக் காட்டிணார்.

இரானுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இறுதிச் சந்தப்பம், தவறவிடவே கூடாது” என்ற தலைப்பில் சம்பிக்க ரணவக்க அவர்கள் வீரகேசரி 15ஆம் திகதி பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சிங்களப் பத்திரிகைகளை விட தமிழ் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
மேற்கண்டவாறு இன்று பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் விமல் விரவன்ச மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்தாவது -
இரானுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இறுதிச் சந்தப்பத்தை தவறவிடவே கூடாது. வெளிவந்த செய்தி சம்பந்தமாக இன்று பத்திரிகை மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவித்தார். சம்பிக்க ரணவக்க மற்றும் சிங்கள உருமைய கட்சி இந்தநாட்டின் ஜனாதிபதி மஹிந்தவூடன் இருக்கும்போது ஒரு முகமும் தற்பொழுது ஒரு முகமுகமாக செயல்படுகின்றனர்.
வட கிழக்கில் யூத்தம் நடைபெறும்போது வட கிழக்கில் இரானுவத்தை விஸ்தரிப்பதற்கும் முன்நின்றவர்கள் தற்பொழுது வட கிழக்கில் உள்ள இரானுவம் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக் கூறுகின்றனார்.
இக்கருத்தை தமிழ்த் தேசிய முன்னணியோ அல்லது ஜ.தே.கட்சி கூறியிருந்தாலும் பரவாயில்லை. ஒரு பௌத்த கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கின்ற கருத்தை நாம் வண்மையாக கண்டிக்கின்றௌம்.
சம்பிக்க ரணவனக்க இந்த அரசுடன் இருக்கும் போது வட கிழக்கில் இராணுவ ஆட்சி இருந்ததா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

No comments:
Post a Comment