Pages

Thursday, December 18, 2014

ஜனாதிபதியின் வெற்றியை உறுதிச்செய்யும் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் இன்று கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்!

Thursday, December 18, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிச்செய்யும் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் இன்று ( 18ஆம் திகதி) கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நடைபெறவுள்ளன.
    
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துக் கொள்வர்.

நாடு முழுவதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிச்செய்யும் 33 கூட்டங்கள் நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் அனுராதபுரம் நாவலப்பிட்டி பாணந்துறை சிலாபம் குளியாப்பிட்டி ஆகிய இடங்களின் கூட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment