Pages

Wednesday, December 17, 2014

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கைகளில் மாற்றமில்லை: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி!

Wednesday, December 17, 2014
இலங்கை::இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கைகளில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
 
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனை அறிவித்துள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடாது என மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்களை கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா சிறந்த முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே புகலிடக் கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment