Pages

Tuesday, December 23, 2014

மைத்திரியை ஆதரிக்க ரவூப் ஹக்கீம் பச்சைக்கொடி?!!


Tuesday, December 23, 2014
இலங்கை::முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் ஒற்றுமையினாலும் தீர்க்கமான கருத்துக்களின் முடிவினாலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தலைவர் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இந்த தீர்மானம் நேற்றும் நேற்று முன்தினமும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
 
கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் ஆகியோர் இணைந்து ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் இந்தத் தீர்மானத்தை தலைவர் ஹக்கீம் உயர்பீடத்தைக்கூட்டி அறிவிக்கவுள்ளதாகவும் மேலும் அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment