Pages

Tuesday, December 23, 2014

கனேடியப் படையினர் பயன்படுத்தும் போதைப் பொருட்களில் கஞ்சா முதலிடம்! ஆய்வு தகவல்!

Tuesday, December 23, 2014
மொன்றியல்::கனேடியப் படையினர் பயன்படுத்தும் போதைப் பொருட்களில் கஞ்சா முதலிடத்தில் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
 
கடந்த ஆண்டு ஜனவரி முதலாந் திகதிக்கும், டிசம்பர் முப்பத்தோராந் திகதிக்கும் இடையில் கனேடியப் படையினர் பரிசோதனை செய்யப்பட்டமை குறித்த விபரங்களில் இருந்து இந்தத் தகவல் தெரியவந்தது.
 
நாடெங்கும் உள்ள 26 ஆயுதப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 4198 பேரிடம் பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் இடம்பெற்ற பரிசோதனையில், 6.6 சதவீதமாக, 279 மாதிரிகளில் ஏதாவது போதைப் பொருள் காணப்பட்டது.
 
போதைப் பொருட்கள் அடையாளம் காணப்பட்ட மாதிரிகளில் 5.3 சதவீதமான மாதிரிகளில் கஞ்சாவும், 4.8 சதவீதமானவற்றில் கொக்கெய்னும் காணப்பட்டன.
 
கஞ்சா பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றாரியோவின் பெடவாவாவில் (டக்ஞ்ஹஞுஹஞுஹ) உள்ள கனேடியப் படைத் தளத்தின் உறுப்பினர்களெனவும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரில் அதிகமானவர்கள் கட்டளையிடும் அதிகாரிகள் அல்லாத இளைய படையினரெனவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment