Pages

Monday, December 22, 2014

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக மைத்திரிபால சிறினே, புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர்களிடம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்: விமல் வீரவன்ச!

Monday, December 22, 2014
இலங்கை::எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் குறித்து, அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

மைத்திரிபாலவின் புதல்வர் தஹாம் சிறிசேன தனது காதலியின் பெற்றோருக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளதாக, அமைச்சர் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் பிராங்குகளும் அமெரிக்க டொலர்களும் தஹாம் சிறிசேன தனது காதலியின் பெற்றோருக்கு அண்மையில் வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை தஹாம் சிறிசேனவின் காதலியினது பெற்றோரிடமிருந்து காவல்துறையினரும், மத்திய வங்கி அதிகாரிகளும் இணைந்து மீட்டுள்ளனர்.

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது எனவும், இவை  புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் வழங்கினார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக மைத்திரிபால சிறினே, புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களிடம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை ஒன்றிணைந்து நாட்டை பிளவுபடுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment