Monday, December 15, 2014

5-வது நாளாக தொடரும் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Monday, December 15, 2014
ராமேசுவரம்::இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் 5-ஆவது நாளை எட்டியது.
 
இலங்கை சிறையில் உள்ள 81 மீனவர்கள் மற்றும் 89 விசைப்படகுகள் ஆகியவற்றை விடுவிக்கக் கோரியும், இந்திய கடற்பரப்பில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் மட்டும் 64 மீனவ கிராமத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment