Pages

Monday, December 22, 2014

நடிக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்களை கண்டறிவதில் ஜனாதிபதி தீவிரம்; 46 அமைப்பாளர்கள் கண்டு பிடிப்பு!

Monday, December 22, 2014
இலங்கை::தனக்கு ஆதரவு திரட்டாமல் நடித்து திரியும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை கண்டறிவதில் ஜனாதிபதி மஹிந்த தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
 
இவ்வாறு 46 தொகுதி அமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
 
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி தனது அதிகாரிகுக்கு உத்தரவிட்டுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment