Pages

Wednesday, December 24, 2014

வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி கடற்கரையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக புதைத்து வைத்த 43 கிலோ கஞ்சா பறிமுதல்!

Wednesday, December 24, 2014
வேதாரண்யம்::வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி கடற்கரையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக புதைத்து வைத்த 43 கிலோ கஞ்சா பறிமுதல்!
 
 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி கடற்கரையில், இரு சாக்குப்பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு
இருந்த, 43 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி கடற்கரையில், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, கஞ்சா புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக, வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேதாரண்யம் டி.எஸ்.பி., சார்லஸ், இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார், சோதனை நடத்தி, புதுப்பள்ளி கடற்கரை மணலில்,
 
இரண்டு சாக்குப் பைகளிலில் புதைத்து வைத்திருந்த, 43 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். போலீசார் கைப்பற்றிய கஞ்சா மதிப்பு, 40 லட்சம் ரூபாய், என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் யார் உள்ளனர், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment