Sunday, December 14, 2014

நாகை மாவட்ட மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்!

Sunday, December 14, 2014
ராமேசுவரம்::இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நாகை மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் 4-ஆவது நாளை எட்டியுள்ளது.
 
நாகை மாவட்டத்திலுள்ள 64 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1500 விசைப்படகுகளும், காரைக்காலைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான விசைப்படகுகளும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
 
மீனவர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், 3 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. அதனால், மீன்பிடித் தொழிலாளர்கள் மட்டுமின்றி, மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கை சிறையிலுள்ள 81 மீனவர்களையும், 89 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment