Monday, December 22, 2014
இலங்கை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 41 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் 41 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில், 28 மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, விடுவிக்கப்பட்ட 28 மீனவர்கள் இரண்டொரு தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சிறையில் மொத்தம் 81 மீனவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று 28 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்னும் 53 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கின்றனர்.

No comments:
Post a Comment