Wednesday, December 17, 2014
இலங்கை::சிவில் பாதுகாப்புப் படையினரின் பிள்ளைகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்காக 10 மில்லியன் பெறுமதியான அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் 30940 பிள்ளைகளுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். இவ்வாரான உதவிகள் சிவில் பாதுகாப்புப் படையின் சேவாவனிதா பிரிவின் நலன்புரித்திட்டங்களில் ஒன்றாகும்.

இதன் ஆரம்ப நிகழ்வு பாதுகாப்பு சேவைக் கல்லூரி கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அயோமா ராஜபக்ஷ தலைமையில் (டிச.15) இடம்பெற்றது.
இத் திட்டத்தை ஆரம்பித்து வைக்குமுகமாக, இவ் விழாவின் போது திருமதி ராஜபக்ஷ அவர்கள் இருபத்து மூன்று பிள்ளைகளுக்கு புத்தகங்கள் அடங்கிய பரிசுப்பொதிகளை வழங்கிவைத்தார். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையில் 175 மதிப்பெண்களுக்கு கூடுதலான புள்ளிகளை பெற்ற 19 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 15000 வழங்கப்பட்டது.
மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 15 மாணவர்களுக்கு தலா 40000 ரூபாய் வழங்கப்பட்டது.
அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்த முப்பத்தி எட்டு குழந்தைகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளதுடன் விழாவின் போது மூன்று பாடங்களிலும் புஏபூ சித்தி பெற்ற 14 பிள்ளைகளுக்கு பெறுமதிமிக்க மடிக்கணினிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் துணைத் தலைவர் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திருமதி இந்து ரத்நாயக்க. திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய, முப்படை சேவா வனிதா பிரிவின் தலைவியர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பயனாளியின் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment