Pages

Thursday, December 11, 2014

இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு: 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள்!


Thursday, December 11, 2014
புதுடெல்லி::ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று இரவு இந்தியா வந்தார் அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா வந்துள்ள புதின் பல்வேறு நிகழச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதலில் அவர் டெல்லியில் இன்று காலை நடந்த இந்தியா– ரஷியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இந்தியா–ரஷியா நாடுகளிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து பேசினார். இதையடுத்து புதின் ஐதராபாத் பவனுக்கு வந்தார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பிறகு மோடி–புதின் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். இரு தலைவர்களின் பேச்சு வார்த்தை முடிந்ததும் இந்தியா–ரஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

15 முதல் 20 ஒப்பந்தங்கள் வரை கையெழுத்தானதாக தெரிய வந்துள்ளது. இந்த ஒப்பந்தங்களில் அணுமின் உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பம் மேம்பாடு இயற்கை எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கடந்த 2000–ம் ஆண்டு முதல் உயர்மட்ட அளவில் பேச்சு வார்த்தைகள் ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது. அதில் இன்று மோடி–புதின் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6–வது பிரிவுகளை நிறுவுவது குறித்தும் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இடம் பெற்றது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3–வது மற்றும் 4–வது பிரிவுகளின் தொழில்நுட்பம் தொடர்பான உடன் படிக்கையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ரஷியா ஆயுத உதவி அளித்து வருவதற்கு இந்தியா தனது எதிர்ப்பை இந்த சந்திப்பின் போது தெரிவித்தது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பல்வேறு விதமான தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்களை அதிகரிப்பது பற்றியும், ரஷியாவில் இருந்து வைரம் இறக்குமதி செய்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் ரஷியாவின் சுகாய் சூப்பர்ஜெட்–100 ரக போர் விமானங்கள், எம்.எஸ்–21 பயணிகள் விமானம் ஆகியவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பாகவும், ரஷிய தொழில் நுட்பத்தில் ‘ஸ்மார்ட்சிட்டி’ உருவாக்குவது பற்றியும் பேசப்பட்டது. கடந்த 2013–ம் ஆண்டு இந்தியா–ரஷியா இடையே 10 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் இருந்தது. தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மோடியும், புதினும் சந்திப்பது இது 3–வது முறையாகும்.

கடந்த ஜூலை மாதம் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி–20 மாநாட்டிலும் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள்:
 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மோடி கூறுகையில், "பாதுகாப்புதுறையில் இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக ரஷ்யா தொடரும். இந்திய அணுசக்தி மின் உற்பத்தியில் கூடங்குளத்தின் பங்கு 20 விழுக்காடு. கூடங்குளத்தில் 3 மற்றும் 4-ம் அணு உலைகள் செயல்படுத்தப்படும்.

நவீன ஹெலிகாப்ட்ரை இந்தியா தயாரித்து வழங்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு வருங்காலத்தில் மேலும் பலப்படும். இந்தியாவில், ரஷ்யாவின் உதவியுடன் மேலும் 10 அணுஉலைகள் அமைக்கப்படும்" என்றார்.

இதன்பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "ரஷ்யா- இந்தியா உறவு வலுப்பெற காரணமாக இருந்தவர் வாஜ்பாய். அவர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே எனக்கு மோடியை தெரியும். பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையே நல்லுறவு அதிகரித்துள்ளது.

இந்தியாவுடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது. இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதுமே முன்னுரிமை கொடுக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான

No comments:

Post a Comment