Pages

Tuesday, December 16, 2014

ஜனாதிபதி தேர்தலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்!

Tuesday, December 16, 2014
இலங்கை::
ஜனாதிபதி தேர்தலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட விருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
 
இதற்கமைய தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலிருந்து 35 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜப்பான், தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், இந்தியா. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தே வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.
 
எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருக்கும் வெளிநாட்டுக் கண்காணி ப்பாளர்கள் உள்நாட்டுக் கண்காணிப் பாளர்களுடன் இணைந்து குழுக்களாக நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் குறிப்பிட்டார். பெப்ரல் அமைப்பு 15 ஆயிரம் கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக 360 வாகனங்களையும் கண்காணிப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தவுள்ளது.
 
வடமேல் மாகாணத்திலிருந்தே அதிகளவிலான தேர்தல் முறைப்பாடுகள் தமக்கு கிடைப்பதாக தெரிவித்த நிறைவேற்றுப் பணிப்பாளர், தேர்தல் சட்ட விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதற்கு தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒத்துழைப்பு கோரியிருப்பதாகவும் கூறினார்

No comments:

Post a Comment