Pages

Thursday, December 11, 2014

குளிர்கால புயல் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 10 சென்ரிமீற்றர்கள் பனிபொழிவை கொண்டு வரும்!

Thursday, December 11, 2014
கனடா ரொறொன்ரோ பெரும்பாகத்தில் பனிப்புயல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பனிப்புயல் காரணமாக 10 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிபொழிவு ஏற்படலாம்.
சிதறிய பனிப்பொழிவுடன் ஆரம்பித்து நடு இரவிற்கு முன்னர் மெல்லிய பனிப்பொழிவு ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை மேலதிக 5-சென்ரிமீற்றர்கள் பனி பொழியும்.
நயாகரா பிரதேசத்தில் 15-சென்ரிமீற்றர் பனி பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக பனிபொழிவுடன் வன்மையான காற்றும் சேர்ந்து கொள்வதால் பனி பறக்கும் நிலை ஏற்படும். இது பார்வை நிலையை  குறைவடைய செய்யும்.
எதிர்பார்க்கப்படும் பனிபொழிவிற்கு தேவையான ஆயத்தங்களை குழவினர் நகரம் பூராகவும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
செவ்வாய்கிழமை இரவு போக்குவரத்து சேவைகள் ரொறொன்ரோ பூராகவும் மலைப்பகுதிகள் மற்றும் பாலங்களிற்கு திரவ உப்பு நிரை இடுவார்கள் என நகரத்தினால் அனுப்ப பட்ட ருவிட் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment