Pages

Thursday, October 9, 2014

ரஜினிகாந்தை இழுக்க வலை விரிப்பா? பா.ஜ.க. மறுப்பு!

Thursday, October 09, 2014
புது டெல்லி::தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பலமாக காலூன்றும் வகையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க.வில் இணைக்கும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரமாக முயன்று வருவதாக ஊடகங்களின் வழியாக யூகச் செய்திகள் உலா வந்துக் கொண்டிருகின்றன.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின அரசியல் விவகாரங்களை கண்காணிக்கும் பொறுப்பாளருமான முரளிதர் ராவ், இந்த கருத்தை மறுத்துள்ளார்.

அதே வேளையில், தமிழ்நாட்டு அரசியலில் பலமாக கால் பதிக்க பா.ஜ.க. முயன்று வருவதை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.

புது டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முரளிதர் ராவ் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களால் ஒரு நிலையற்ற தன்மை வேகமாக உருவாகி வருகின்றது என்பதை நாங்கள் கவனித்து வருகின்றோம். தென்னாட்டில் எங்கள் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டும் வருகிறோம்.

தமிழ்நாட்டில் எங்கள் கட்சியை பலப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜெயலலிதாவின் கைது மற்றும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியலில் பெரிய சக்தியாக உருவாவதற்கான வாய்ப்பாக பா.ஜ.க. பார்க்கின்றது.

5 கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்புடன் தமிழக மீனவர்கள் பிரச்சனை, நெசவாளர்கள், ஜவுளி மற்றும் சிறு தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழக பா.ஜ.க. உயிர்ப்புடன் இயங்கி வருகின்றது.

இவ்வாறு கூறிய அவர், நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க.வில் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக கூ
றப்படுவதை மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment