இலங்கை::புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை உள்ளக தீர்மானமாக இருக்கக் கூடுமென தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சிறந்த தீர்வு ஒன்றை வழங்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
புலிகள் கொடூர பயங்கரவாத அமைப்பு என தெரிவித்துள்ள இலங்கை, பயங்கரவாத பட்டியலில் புலிகள் இணைக்கப்படுவதற்கு பூரண ஆதவரளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும்தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு தேவையான உதவிகளையும் தகவல்களையும் வழங்கத் தயார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் விசாரணை செய்து வருவதாகக் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு சில உறுப்பு நாடுகளில் இன்னமும் விசாரணைகள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க எடுத்தத் தீர்மானம், இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதுடன், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடுமென குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment