Monday, October 13, 2014

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது!

Monday,October, 13, 2014
இலங்கை::அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்பானது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலானது அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் ஓர் கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்து வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இடதுசாரி கட்சிகளுடன் விரைவில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படவிருந்து சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதன் பின்னர் மீளவும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment