Pages

Thursday, October 16, 2014

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தால்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

Thursday, October 16, 2014
புதுடெல்லி::இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தால்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி ஜெனரல் தால்பீர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டில் தால்பீர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அண்டை நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களின் ஓர் கட்டமாக தால்பீர் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பூட்டான், நேபாளம், பங்களாதேஸ், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஜெனரல் தால்பீர் விஜயம் செய்ய உள்ளார்.

பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஜெனரல் தால்பீர் இந்த ஆண்டிலேயே விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment