Pages

Tuesday, October 14, 2014

யாழ்ப்பாண மக்களின் பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் மத்தியில் யாழ்.நகரில் அலையென திரண்டு யதார்த்தத்தை உணர்த்திய மக்கள்!

Tuesday, October 14, 2014
இலங்கை::யாழ்ப்பாண மக்களின் பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் மத்தியில் யாழ்தேவி நேற்று யாழ். நகரை சென்றடைந்தது. சுமார் கால் நூற்றாண்டுகளின் பின்னர் யாழ். மண்ணை யாழ்தேவி முத்த மிட்டதும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் பெரும் ஆனந்தத்தில் திளைத்ததோடு இனிப்புகளும் சிற்றுண்டி களும் வழங்கி மகிழ்ந்தனர்.
 
பளையில் இருந்து நேற்று முற்பகல் 10.10 சுபவேளையில் தனது பயணத்தை பியாழ்தேவிபீ ஆரம்பித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளும் அதில் பயணம் செய்து யாழ்ப்பாணத்து மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டார்.
 
புலிபயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தலைவன் யாழ்தேவியில் பயணம் செய்யும்போது ரயில் பாதையின் இருமருங்கிலுமிருந்து மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல, மிகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தது.
 
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நடந்த சம்பிரதாயபூர்வ வைபவங்களைப் பார்க்கின்றபோது மக்களின் உள்ளக் கிடக்கைகளும் அவர்களது ஆதங்கமும் யதார்த்த பூர்வமாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்தேவியில் இருந்து ரயில் நிலையத்தினுள் இறங்கியதும் மக்கள் பலத்த கரகோஷத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததோடு பிசமாதான தேசத்தின் தந்தைபீ என குரலெழுப்பினர்.
 
வட மாகாண வரலாற்றில் நடந்த மிகவும் முக்கியமான தடம்பதிக்கும் நிகழ்வு இதுவாகும். இதனைத் தொடர்ந்து, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடந்த தோடு, யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து அரச ஊழியர் களுக்கு மோட்டார் சைக்கிள்களும் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன.
நாட்டின் தலைவர் ஒருவர் வட மாகாணத்தில் தங்கியிருந்து அந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின், இன, மத வேறுபாடின்றி மக் களை நேசிக்கும் பண்பு இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.உண்மையில், வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிக ளிலும் சமூக நலத் திட்டங்களிலும் பாரிய திருப்பு முனை ஏற்பட்டு ள்ளது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையொன்று தனது பணியை சரிவர செய்யாத நிலையில் மத்திய அரசாங்கம் நேரடி களப்பணியில் இறங்கியிருக்கிறது.
 
இலங்கை வரலாற்றில் நாட்டின் தலைவர் ஒருவர் வட மாகாணத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து மக்கள் நலத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதும் பிரதேசத்தின் நிலைமைகளை நேரடியாக ஆராய்வதும் இதுவே முதற்தடவையாக இருக்கிறது.
 
இந்த நிலையில், வட மாகாணத்தை ஆட்சி செய்கின்ற முதலமைச்சரும், அவர் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் களும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்ட நிகழ்வுகளைப் பகிஷ்கரி த்திருக்கிறார்கள்.
 
ஒரு நாட்டின் தலைவர் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது வட மாகாண சபையின் ஆளும் தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனைப் புறக்கணித்து கண்டும் காணாமலும் இருப்பது ஆரோக்கியமானதல்ல.
 
வடக்கில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்தப் பிரதி நிதிகள், அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் இருந்து ஒதுங்கிக்கொள்வது அந்தப் பிரதேச மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை புரிந்துகொள்ளவேண்டும்.
 
கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை நேற்று முன்தினம் ஆரம் பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்த 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்விலும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இதிலும் தமிழ்க் கூட்டமைப்பினரோ, வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனோ கலந்துகொள்ளவில்லை.
 
என்றாலும், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ஒருவிடயத்தை மிகவும் தெளி வாகச் சொன்னார், பிஅரசியல்வேறு, அபிவிருத்தி வேறு வட பகுதித் தமிழர்கள் கூட்டமைப்புக்கு இதனை உணர்த்த வேண்டும்பீ என்றார்.
 
எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப் போவதில்லை. டயஸ் போரா அமைப்புக்களைத் திருப்திப்படுத்துவத ற்காக தமிழ் மக்களின் நிம்மதியை குலைக்க முயல்வது கூட்டமைப்பு செய்யும் பெரும் துரோகமாகும். அபிவிருத்திகளைப் புறக்கணித்து எதிர்ப்பு அரசியலை செய்து தங்களது இருப்பை தக்க வைக்கலாமென தமிழ்க் கூட்டமைப்பு நினைப்பது வெறும் கற்பனாவாதமாகும்.
 
கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சரும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் அதனையும் மீறி, பியாழ்தேவிபீ ரயிலை வரவேற்கத் திரண்ட மக்கள் இன்றைய யதார்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மை யைப் புரிந்துகொள்ளாவிட்டால் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்வி க்குறியாகிவிடும்.
 
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்
.
- கீதாசாரம்!

No comments:

Post a Comment