Tuesday, October 14, 2014
சென்னை:: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மீதான, 'பொடா' வழக்கை, வாபஸ்
பெற மறுத்த, சிறப்பு நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து
செய்தது.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில், 2002 ஜூனில் நடந்த பொதுக்கூட்டத்தில், வைகோ பேசினார்.
கைது
:
அதில், தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக, வைகோ,
கணேசன், அழகுசுந்தரம், கணேசமூர்த்தி, பூமிநாதன், சிவந்தியப்பன், நாகராஜன்,
வீர இளவரசன், பி.எஸ்.மணியன் ஆகியோர் மீது, 'பொடா' சட்டத்தின் கீழ், வழக்கு
தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். கடந்த, 2002 ஜூலை 11ம் தேதி,
அமெரிக்காவில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வைகோவை,
போலீசார் கைது செய்து,
திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,
காவலில் வைத்தனர். வைகோ தவிர, எட்டு பேருக்கும், சென்னை உயர் நீதிமன்றம்,
2004 ஜனவரியில், ஜாமின் வழங் கியது. 2004 பிப்ரவரி யில், வைகோவுக்கு,
ஜாமின் கிடைத்தது. பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்ற, ஓய்வு பெற்ற தலைமை
நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழு, வைகோ உள்ளிட்ட,
ஒன்பது பேர் மீதான, 'பொடா' வழக்கில், ஆரம்ப முகாந்திரம் இல்லை என, உத்தரவிட்டது.
இந்த
உத்தரவை அமல்படுத்தக் கோரி, வைகோ, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தார். உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு, மனு தாக்கல் செய்தது.
மறுஆய்வு
:
இரண்டு மனுக்களையும், உயர் நீதிமன்றம் விசாரித்தது. 'மறுஆய்வுக்
குழுவின் உத்தரவு, மாநில அரசை கட்டுப்படுத்தும்; அரசு குற்றவியல்
வழக்கறிஞரை கட்டுப்படுத்தாது; வழக்கு வாபஸ் பெறுவதை பொறுத்தவரை, அரசு
வழக்கறிஞர் தான் முடிவுஎடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அப்பீல்'
:
இதையடுத்து, இவர்கள் மீதான, 'பொடா' வழக்கை வாபஸ் பெற, சிறப்பு
நீதிமன்றத்தில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், மனு தாக்கல் செய்தார். அந்த
மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2004 செப்டம்பரில், இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், 'பொடா' சட்டத்தை, மத்திய
அரசு ரத்து செய்தது. 2004 டிசம்பரில், அதற்கான அறிவிப்பு வெளியானது. தனி
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வைகோ உள்ளிட்டோர், சென்னை உயர்
நீதிமன்றத்தில், 'அப்பீல்' மனு தாக்கல் செய்தனர். அதை, நீதிபதிகள்
ராஜேஸ்வரன், மதிவாணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. வைகோ
உள்ளிட்டவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் யசோத்வரதன், வழக்கறிஞர்கள்
தேவதாஸ், நன்மாறன், பிரியகுமார், செந்தில்குமார், அருணன் ஆஜராகினர்.
ஏற்க
முடியாது :
மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்', பிறப்பித்த உத்தரவில்,
'சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இருந்து, வழக்கை வாபஸ் பெற, சட்டத்தில்
அனுமதி வழங்கப்பட்டு
உள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவை, சட்டப்படி ஏற்க முடியாது. மனுதாரர்களின் கோரிக்கை
ஏற்கப்படுகிறது' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment