Saturday, October 4, 2014

ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரம்: இங்கிலாந்து பிணை கைதி கழுத்து அறுத்து கொலை: புதிய வீடியோ வெளியீடு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Saturday, October 04, 2014
லண்டன்::இங்கிலாந்தை சேர்ந்த டாக்சி டிரைவர் ஆலன் ஹென்னிங் சிரியாவில் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிரியா சென்றார். அவரை பிணையக் கைதியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். தற்போது அவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான புதிய வீடியோ நேற்று வெளியானது.இங்கிலாந்தில் மான்செஸ்டர் மாநிலம், எக்லஸ் நகரை சேர்ந்தவர் ஆலன் ஹென்னிங் (47). கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள சென்றார். அப்போது இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதியாகப் பிடித்து சென்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த முன்வந்தது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகள் உதவ முன்வந்தன.தற்போது ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் வலுவடைந்து வருகிறது. இந்நாடுகளை அச்சுறுத்தும் விதமாக, தாங்கள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் சாட்லாப் ஆகிய 2 அமெரிக்க பத்திரிகையாளர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொன்றனர்.

அதேபோல், இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஹெயின்ஸ் என்ற சமூகசேவகரையும் கழுத்தை அறுத்து கொன்றனர். இதுதொடர்பான வீடியோக்களையும் ஏற்கெனவே வெளியிட்டனர். அத்துடன் ஆலன் ஹென்னிங்கையும் கொல்லப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் ஹென்னிங்கை விடுவிக்குமாறு அவரது மனைவி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில், தாங்கள் பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்த இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஹென்னிங்கை  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொன்றனர். இதுதொடர்பான புதிய வீடியோவையும் நேற்று வெளியிட்டனர். அதில், நான் டேவிட் ஹென்னிங் பேசுகிறேன்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த முடிவுக்கு, இங்கிலாந்து மக்களில் ஒருவனாகிய நான், என்னை விலையாக கொடுக்கிறேன் என்று ஆலன் ஹென்னிங் கூறியிருந்தார்.இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆலனை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிரியாவில் மக்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொள்ள சென்ற ஆலனை பிணையக் கைதியாக பிடித்து சென்று, தற்போது கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இத்தகைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் விரைவில் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment