Pages

Tuesday, October 7, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிலையான கொள்கைகள் எதுவும் கிடையாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 07, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிலையான கொள்கைகள் எதுவும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காலத்திற்கு காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கொள்கைகiயும் கோட்பாடுகளையும் மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் தமது கட்சி நல்ல உறவைப் பேணி வருவதாகவும், இதன் ஊடாக மக்களுக்கு தாம சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இருப்பதனை மக்கள் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒவ்வொரு காலத்திற்கு காலம் மாறக்கூடியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment