Pages

Saturday, October 11, 2014

இந்திய வீரர்களின் அதிரடியால் பணிந்தது பாக்: எல்லையில் தாக்குதலை குறைத்தது!

Saturday, October 11, 2014
ஜம்மு:கடந்த ஒன்பது நாட்களாக எல்லை பகுதியில் வாலாட்டி வந்த பாக்., ராணுவம், இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலாலும், பிரதமர் நரேந்திர மோடியின் எச்சரிக்கையாலும், நேற்று அடக்கி வாசித்தது. எல்லையில், தன் தாக்குதலை பாக்., ராணுவம் குறைத்து கொண்டது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக, பாக்., ராணுவ வீரர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

எட்டு பேர் பலி:

குறிப்பாக, இந்திய எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் மீது, துப்பாக்கியாலும், பீரங்கிகளாலும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில், எல்லையோர கிராமங்களில் வசித்த எட்டு பேர் இறந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கிராமங்களில் வசித்த, 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் கூறுகையில், 'எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்தால், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை அந்த நாடு தாங்க முடியாது' என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும், 'பாக்., ராணுவத்தின் அட்டகாசத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது' என, கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நான்கு இடங்களில்:

இதற்கிடையே, எல்லை பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக இந்திய வீரர்களும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பணிந்துள்ளது.நேற்று முன்தினம், இந்தியாவின், 60 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய பாக்., ராணுவம், நேற்று, கதுவா மாவட்டத்தில், நான்கு இடங்களை மட்டுமே தாக்கியது. ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் ஒரு இடங்களில் கூட தாக்குதல் நடத்தவில்லை.கதுவா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இதையடுத்து, பாக்., தரப்பில் அமைதி காக்கப்பட்டது.

இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு கூறுகையில், ''எல்லையில் நடக்கும் பிரச்னைகளை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியலாக்க கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகள், நம் வீரர்களின் மன உறுதியை சீர்குலைத்து விடும்,'' என்றார்.

No comments:

Post a Comment