Wednesday, October 15, 2014
புதுடெல்லி::சுவிட்சர்லாந்து
நாட்டு வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்களும், அரசியல்வாதிகளும்
கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல்களை தரும்படி இந்தியா பலமுறை கேட்டும் சுவிட்சர்லாந்து மறுத்து வருகிறது.
சுவிட்சர்லாந்து
நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது
தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவை
மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த குழு சுவிட்சர்லாந்து சென்று
அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினால் கருப்பு பண விவகாரத்தில்
மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
அதன்படி
இந்தியாவில் இருந்து வருவாய்த்துறை செயலாளர் சக்தி காந்தாதாஸ் தலைமையிலான
குழுவினர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளனர்.
இந்த குழுவில்
மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் கே.வி.சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தில்
வெளிநாட்டு வரிவிதிப்பு துறையில் பணியாற்றும் 2 அதிகாரிகள் இடம்
பெற்றுள்ளனர்.
அவர்கள் இந்த வாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு
அதிகாரிகளை சந்தித்து பேசுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment