Pages

Monday, October 20, 2014

இராணுவத்தினரிடம் சிக்காது யாழ் மல்லாவி பிரதேசத்தில் வசித்து வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது!

Monday, October 20, 2014
இலங்கை::புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம் மல்லாவி பிரதேசத்தில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த நபர் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது குறித்த நபரை,புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
கடந்த 18ம் திகதி குறித்த நபரை விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதேவேளை, அண்மையில் வவுனியாவில் வைத்து மற்றுமொரு  புலி உறுப்பினரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment