Pages

Sunday, October 12, 2014

காதோடு காதாக!!! காதோடு காதாக!!! என்னதான் இருந்தாலும் அவர் படித்த மனிதர்தானே!!!

* என்னதான் இருந்தாலும் அவர் படித்த மனிதர்தானே
 
படையினரை வெளியேற்றுவோம் என உறுதி அளித்தமையாலேயே வடக்கில் சனம் தம்மை வெற்றியடையச் செய்தனர் என்ற உண்மையை வடக்கு முதல்வர் போட்டுடைத்திருக்கிறார். அதாவது நடத்த முடியாத காரியம் எனத் தெரிந்திருந்த போதிலும், தமிழ்க் கூட்டமைப்பினால் உரைக்கப்பட்ட இந்தப் பொய்யான வாக்குறுதிக்குத் தானும் மக்கள் முன்பாக பலிக்கடாவாகியுள்ளதையே அவர் நாகரிகமாகக் கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் படித்த மனிதர்தானே.
 
* குறும்புத்தனமான அழைப்பை விடுத்திருக்கிறார் மனோ ஐயா
 
மலையக வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொண்டா, திகா, இராதா ஆகியோர் முன்வர வேண்டுமாம். இவர்கள் செய்துவரும் சேவைகளை நன்கறிந்தும் இந்தக் குறும்புத் தனமான அழைப்பை மனோ ஐயா விடுத்திருக்கிறார். இதற்கும் பேப்பரில் அரைப் பக்கத்திற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். தேவையை அவர்களைச் சந்தித்தே கூறியிருக்கலாம். எல்லாஅரசியல் தந்திரம். ஆனால் ஒன்று, அரசாங்கத்திலுள்ள மலையக அமைச்சர்கள் சிறந்த சேவைகள் செய்வதை இவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
* அரசைக் குறைகூறுவதே ஐயாவின் முழுநேரத் தொழில்
 
அரசாங்கத்தின் நல்லிணக்கம் பேச்சளவில் தானாம். செயற்பாடுகளில் இல்லையாம். இது மன்னார் மதகுருவானவரின் பத்திரிகைச் செய்தி. அரசைக் குறை கூறுவதே ஐயாவின் முழுநேரத் தொழில் என்பதால்
 
உண்மை தெரிந்த பொதுசனம் அவரது கூற்று குறித்துச் சிரித்துவிட்டு தமது அலுவல்களைக் கவனித்து வருகின்றனர்.
 
மதகுரு இனியாவது இதுபோன்று மக்களது ஏளனத்திற்கு உள்ளாகும் ஒரு பக்கச் சார்புத் தன்மையை கைவிட்டுவிட்டு தமிழ்த் தரப்பிற்கு கொஞ்சமாவது அறிவுரை கூறவேண்டும்.

No comments:

Post a Comment