Thursday, October 02, 2014
இலங்கை::இராணுவ பிரசன்னத்தை மக்கள் எதிர்க்கவில்லை என கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ பிரசன்னம் அவசியமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இராணுவத்தினர் மாகாணத்தில் இருக்க வேண்டும் என்றே மக்கள் வாக்களிப்பாளர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கைப் பொருத்தவவரையில் மக்களுக்கு தெரியக் கூடிய வகையிலேயே உளவு மற்றும் புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடைபெறும் நிகழ்வுகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுவது உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அரச விரோத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என கண்காணிக்கப்படுவதாகவும், உளவுப் பணிகளினால் நிகழ்வுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருந்தந்தை அன்டன் ஸ்டீபனினால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகமொன்றில் பிரிவினைவாதத்தை போசிக்கும் வகையிலான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண பாடசாலை நூலகங்ககளில் இந்த பிரிவினைவாதத்தை தூண்டும் புத்தகங்களை வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளதாகவும், இளம் தலைமுறையின் தலைகளில் தீவிரவாத கிருமிகளை உட்புகுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் சமாதனத்தையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டே செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் சமூகத்தில் குழப்பங்களை விளைவிக்கவில்லை எனவும், புனர்வாழ்வு அளிக்கப்படாத அப்பன் கோபி போன்றவர்களே மீளவும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை வெளியேறுமாறு கோரிய போதிலும், மக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment