Pages

Saturday, October 4, 2014

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Mahinda Rajapaksa, the Sri Lankan president

Saturday, October 04, 2014
இலங்கை::இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி, இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்ப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment