Pages

Friday, October 10, 2014

வடக்கு மாகாணத்திற்கு சுயாட்சி யாழ்.சிவில் புலிகள் ஆதரவு அமைப்பொன்று ஐ.நாவில் கோரிக்கை!

Friday, October 10, 2014
வடக்கு மாகாணத்திற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குமாறு யாழ்ப்பாண புலிகள் ஆதரவு சிவில் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயற்குழுவில் கோரியுள்ளதாக  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தமிழ் சிவில் அமைப்பு ஒன்று இவ்வாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
18 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த பிரிவினைவாத கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சுயாட்சி அதிகாரங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் வடக்கில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக குறித்த சிவில் அமைப்பு குற்றம் சுமத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தின்
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை முன்வைத்த யாழ்ப்பாண தமிழ் சிவில் அமைப்பின் தலைவரை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment