Tuesday, October 07, 2014
பெங்களூர்::ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர் நீதிமன்றம்
ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை-பவானி சிங் திடீர் பல்டி
சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமின் கோரி அவர் சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஜெ., தரப்பில், பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.
நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று மதியம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார்.
நிபந்தனை குறித்து இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி அறிவிப்பார்
இதனையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டன், மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

No comments:
Post a Comment