Friday, October 03, 2014
வாஷிங்டன்::கடந்த 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த வியட்நாம் போரைத் தொடர்ந்து அந்த நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சி
மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வியட்நாமிற்கான ஆயுத சப்ளையை நிறுத்திவைத்தது. அங்கு நடைபெற்று
வந்த சர்வாதிகார அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தடை ஒன்றினால் சென்ற 1984 ஆம் ஆண்டு முதல்
அந்த நாட்டிற்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
வியட்நாம் போர் முடிந்து 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த இரு நாடுகளின் உறவுகளும் சகஜ நிலைமைக்குத் திரும்பின. அதன் பின்னர் 2006ஆம் ஆண்டில் மரணத்தை அளிக்காத ஆயுதங்களின் விற்பனைக்கு அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது.
தற்போது பாரக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஆசிய நாடுகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்த அமெரிக்கா முயற்சிக்கும் வேளையில் வியட்நாமுடனான உறவுகளும் இறுகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை வியட்நாமின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான பாம் பின் மின் வாஷிங்டனில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் விளைவாக 40 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஆயுத ஏற்றுமதித் தடைகளின் ஒரு பகுதியை நீக்குவதாக கெர்ரி அறிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு ஆயுதங்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார் என்று அலுவலகத் தகவல் தொடர்பாளரான ஜென் சகி தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பானது தென் சீனக் கடலில் சீன அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் வியட்நாமில் காணப்படுவதாக அமெரிக்கா சில எடுத்துக்காட்டுகளை அளிக்கும்போதும் இந்த முடிவு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கண்டனத்தையே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment